ஏற்காடு இடைத் தேர்தல்- கருணாநிதியை சந்தித்து ஆதரவைத் தெரிவிக்கிறார் திருமா
Subscribe to Oneindia Tamil

திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரி அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார் கருணாநிதி. ஆனால் இதை கம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரித்து விட்டன. தேமுதிக, காங்கிரஸ் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் திமுகவுக்குத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
இது பற்றி முடிவு செய்ய மாநில செயற்குழு கூட்டம் நாளை மறை மலைநகரில் நடக்கிறது. அதில் திமுகவை ஆதரிப்பதற்கான தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்படுகிறது.
பின்னர் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications