நான் வி.சி.க. வேட்பாளரல்ல... பொது வேட்பாளர்: ஆர்.கே.நகரில் களமிறங்கும் வசந்தி தேவி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட்டாலும், தான் அக்கட்சியின் வேட்பாளர் இல்லை; பொது வேட்பாளர் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியைக் கேட்டு வாங்கியபோதே பரபரப்பு ஏற்பட்டது. அத்தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனே போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர் பட்டியல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அக்கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு, ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை ஆர்.கே.நகரில் யாருமே எதிர்பார்க்காத வேட்பாளராக கல்வியாளர் வசந்திதேவியை களமிறக்குவதாக அறிவித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
கல்வியாளர், குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் குரலெழுப்பி வருகிறவர், தீவிர இடதுசாரி சிந்தனையாளர் என பன்முகம் கொண்டவர் வசந்திதேவி. இவர் மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தனது இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிடுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தில்தான் நான் போட்டியிடுகிறேன். ஆனாலும் அக்கட்சியின் வேட்பாளர் இல்லை. நான் பொது வேட்பாளர்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "அவர்கள்தான் என்னை தேர்தலில் போட்டியிடும்படி கேட்டார்கள், ஒப்புக்கொண்டேன். தோழர்கள் யாரும் என்னை போட்டியிடும்படிக் கேட்கவில்லை. கூட்டணி என்று வந்து விட்டபின் நான் பொது வேட்பாளர். ஒரு நல்ல விஷயத்துக்காக கரங்கள் ஒன்று சேரும்போது சில மாறுபட்ட கருத்துகள் வெளியிலிருந்து வருவதைத் தடுக்க முடியாது. நான் என்னை விசிகே வேட்பாளராக கருதவில்லை. மீண்டும் வெற்றித் திருநாளில் சந்திப்போம்" என வசந்திதேவி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வசந்தி தேவியை நிஜமாகவே பொது வேட்பாளராக அறிவித்து, திமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications