"மதச்சார்பற்ற அணி"... திமுக- காங். அணிக்கு மீண்டும் திரும்புகிறார் திருமா?
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் திரும்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வந்தது விடுதலை சிறுத்தைகள். அதே நேரத்தில் திமுகவில் ஒருதரப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் இருப்பதால் வடமாவட்டங்களில் கணிசமாக வன்னியர் வாக்குகள் கிடைக்கவில்லை என கூறி வந்தனர்.
இதனால் திமுக, மெல்ல மெல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டது. இதை உணர்ந்த விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணி ஆட்சி கோஷம் போன்றவற்றை முன்வைத்து இடதுசாரிகள், மதிமுகவுடன் கை கோர்த்தது. பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் ஒரு அங்கமானது.

மாற்று முழக்கம்
சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற முழக்கத்துடன் மக்கள் நலக் கூட்டணி களமிறங்கியது. ஆனால் மக்கள் இந்த கூட்டணியை நம்பவில்லை. இக்கூட்டணியால் டெபாசிட்டை கூட தக்க வைக்க முடியாத பரிதாப நிலைதான் ஏற்பட்டது.

மதச்சார்பற்ற அணி
இந்த நிலையில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் 'மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற அணியை உருவாக்குவது எங்கள் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

கூட்டணி மாற்ற சமிக்ஞை
இது விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி மாறப் போகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகி அடுத்த லோக்சபா தேர்தலின் போது திமுக- காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் மீண்டும் இணைவதற்கான முதல் கட்டமே இத்தீர்மானம் எனவும் கூறப்படுகிறது.

சும்மா அதிருதுல்ல!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த தீர்மானம் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, இடதுசாரி கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. இத்தீர்மானம் குறித்து மதிமுக, இடதுசாரி தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் திருமாவளவனுடன் பேசிவிட்டு சொல்கிறோம் என்கின்றனர். திமுகவும் கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நம்முடன் இருக்கட்டுமே என்கிற நிலையில் இருக்கிறது.
ஆகையால் திமுக- காங்கிரஸ் அணிக்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரும்புவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications