நான் ஒன்றும் நெருங்கி வரவில்லை... அமைச்சர் ஜெயக்குமாருக்கு திருமாவளவன் நோஸ்கட்!

அதிமுகவுடன் நான் நெருங்கி வரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமல்ஹாசன் பொய் சொல்கிறார்..திருமாவளவன் நெருங்குகிறார்-ஜெயக்குமார்-வீடியோ

    சென்னை: அதிமுகவுடன் நான் நெருங்கி வரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் நாளை நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.

    எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இருவருமே எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    அழைத்தால் செல்வேன்

    அழைத்தால் செல்வேன்

    இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

    ஜெயக்குமார் பதில்

    ஜெயக்குமார் பதில்

    இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என கூறியதன் மூலம் திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார் அவருக்கு பாராட்டுக்கள் என்றார்.

    நெருங்கி வரவில்லை

    நெருங்கி வரவில்லை

    இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் நெருங்கி வரவில்லை.

    அரசியல் கருத்து இல்லை

    அரசியல் கருத்து இல்லை

    எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அவரது விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டினேன். அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதுபோல் அரசியல் ரீதியாக தான் எந்தக் கருத்தும் கூறவில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+