திமுக, அதிமுக இடம் பெறாத 3வது அணி அமைந்தால் நல்லது - திருமாவளவன்
ஈரோடு: திமுக, அதிமுக இடம் பெறாத 3வது அணி அமைந்தால் நல்லது, சிறந்தது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு கட்சி ஆட்சி முறை இருந்தால் ஜனநாயகத்தை பரவலாக்க முடியாது. எனவே, தான் கூட்டணி ஆட்சி தேவை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் சென்னையில் ஆக.17-ம் தேதி கூட்டணி ஆட்சி மாநாடு நடத்துகிறோம்.

அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸை தவிர்த்தும், மாநிலத்தில் திமுக, அதிமுகவை தவிர்த்தும் பிற கட்சிகளை அழைக்க இருக்கிறோம்.
கூட்டணியில் இருந்து எங்களை கழற்றிவிட்டதாக திமுகவும், கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டதாக நாங்களும் இதுவரை அறிவிக்கவில்லை. திமுகவுடன் சுமூக உறவு தொடர்கிறது. அதேநேரத்தில், திமுக, அதிமுக ஆட்சிக்கு வர முடியாத நிலைக்கு மூன்றாவது அணி அமைந்தால் சிறப்புக்குரியது.
கூட்டணி ஆட்சி மாநாட்டுக்கும், மூன்றாவது அணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதற்காக தனியாக கூட்டு இயக்கம் உருவாக்குவது தொடர்பாக மட்டும் தான் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மூன்றாவது அணி குறி்த்து இதுவரை பேசவில்லை என்றார் திருமாவளவன்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications