பாமக வேட்பாளரை கொல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: அரூர் தொகுதி பாமக வேட்பாளரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலை சிறுத்தைகள் என கூறப்படுகிறது எனவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை படுகொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் முரளி சங்கர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரை செல்பேசியில் தொடர்பு கொண்ட சிலர், அரூர் தொகுதியில் பா.ம.க.வுக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்காக தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்நாள் இரவு முரளி சங்கர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களின் செயல்கள் ஐயமளிக்கும் வகையில் இருந்ததை கண்ட முரளி சங்கரின் தந்தை, அவர்களை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அரூர் பேரூந்து நிலையம் அருகில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முரளிசங்கர், நேற்றிரவு 10 மணிக்கு சந்தைமேடு என்ற இடத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அந்த நேரத்தில் வாகனத்தில் வந்த சிலர் வேட்பாளரையும், அவருடன் வந்தவர்களையும் சுற்றி வளைத்துள்ளனர். வேட்பாளர் முரளி சங்கரின் உறவினரான மதி என்பவர் மீது அந்தக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்றபோது, வேட்பாளர் முரளிசங்கரும், அவருடன் வந்தவர்களும் எச்சரித்ததால் மதி விலகி நின்று உயிர் தப்பினார். இதையடுத்து தாக்குதல் நடத்த வந்தவர்களை அங்கிருந்த பா.ம.க.வினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். சந்திர சேகர், மருதுபாண்டி ஆகிய இருவர் மட்டும் பிடிபட்ட நிலையில், வாகனத்தில் வந்த மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அரூர் தொகுதி வேட்பாளர் முரளி சங்கரை படுகொலை செய்யும் நோக்கத்துடனேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது. வேட்பாளருடன் வந்த பா.ம.க. தொண்டர்களும், வேட்பாளரின் காவலுக்கு வந்த காவலரும் அக்கும்பலை மடக்கிப் பிடித்திருக்காவிட்டால், வேட்பாளர் முரளிசங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலை சிறுத்தைகள் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக பிடிபட்ட இருவர் தவிர மற்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதையும் காவல்துறை கண்டு பிடித்து கைது செய்வதுடன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications