புதுச்சேரியில் எச் ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச் ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியிலும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். எச் ராஜா தனது கருத்து குறித்து வருத்தம் தெரிவித்த பின்னரும் போராட்டம் தொடருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications