தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி.க கேள்வி
ஹிப்ஹாப் தமிழா ஆதி யாருக்காக கொதிக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷானநவாஸ் கேட்டுள்ளார்.
சென்னை: தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி, அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவிபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூநர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:

தமிழர்களை பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறார் சுப்ரமணிய சுவாமி. தமிழ் இளைஞர்களின் அறப்போரை இழிவுபடுத்தினார் ராதாராஜன். மதம் கடந்த மக்கள் எழுச்சியில் மதவெறியை விதைக்கத் துணிந்தார் எச்.ராஜா.
இவர்கள் மூவருமே ஆர்.எஸ்.எஸ் காரர்கள். அதனால் தான், மக்கள் சினம் கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் அதன் அதிகாரக் குறியீடாக உள்ள மோடியையும் தாக்குகின்றனர். இதில் என்ன பிழை?
சு.சுவாமியும் ராதா ராஜனும் எச்.ராஜாவும் இந்த போராட்டத்தை இழிவு செய்த போது கொதிக்காத ஹிப் ஹாப் ஆதி, இப்போது ஏன் கொதிக்கிறார்? யாருக்காக கொதிக்கிறார்? என்று கேட்டுள்ளார் ஷாநவாஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications