Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கோண கள்ளக் காதல்.. பெண்ணை கத்தியால் வெட்டிய விசிக பிரமுகர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்ணை கத்தியால் வெட்டிய விசிக பிரமுகர்- வீடியோ

    செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கள்ளக் காதல் விவகாரத்தில் ஒரு பெண்ணை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்துவருகிறார். இந்த வழக்கை போலீஸார் அனுகிய விதமும் தேஸ்கோவின் பின்னணியும் உள்ளூர் பத்திரிகையாளர்களே மிரளும்படியாக உள்ளது. அந்த விசிக பிரமுகர் யார்? அவரது பின்னணி என்ன? என்று விசாரித்தால் திடுக்கிட வைக்கிறது.

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள கண்ணியம் நகரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி என்கிற தேஸ்கோ. பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவில் சப்ளை லாரிகளில் தினக்கூலியாக மூட்டை தூக்கிக்கொண்டிருந்தவர். திடீரென சாராய வியாபாரத்தில் இறங்கிய தேஸ்கோ குறுகிய காலத்திலேயே செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு மொத்த விநியோகஸ்தராக மாறினார்.

    VCK’s person Dheivasigamani attacks on a woman in Illegal sex affair, terrible background

    தேஸ்கோ அவருடைய தம்பி பாலாஜியின் துணையுடன் சாராய வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தினார். கண்ணியம் நகரில் வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டு ஆட்களையும் சேர்த்துக்கொண்டார். விரைவிலேயே தேஸ்கோ சாராய வியாபாரத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். போலீஸ்காரர்களிடம் 'தாராளமாக' இருந்து நெருக்கமாக்கிக்கொண்டார்.

    அவ்வப்போது, காவல்துறை அவர் மீது போட்ட வழக்குகளிலிருந்து தனது பண பலத்தால் விடுபட்டுவந்தார். சில நேரங்களில் போலீஸாரிடமிருந்து நெருக்கடிகள் வந்தபோது சாராய வியாபாரி தேஸ்கோவுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு தேவைப்பட்டது.

    இந்நிலையில்தான், தேஸ்கோ தனது பாதுகாப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். தெஸ்கோவுக்கு அரசியல்வாதி என்ற புதிய அடையாளம் மேலும் பலத்தைக் கொடுத்தது. கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு நகர செயலாளராக பொறுப்பளிக்கப்பட்டது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக செலவு செய்வார். கூட்டத்தை கூட்டுவார்.

    அதே நேரத்தில், தேஸ்கோவின் அராஜகங்களும் அதிகரித்தன. தேஸ்கோ மீது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலீஸ் எஸ்ஐயை தாக்கியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. செய்யாறு கன்னியம் நகரில் சாராய பதுக்கலை போலீஸுக்கு காட்டிக்கொடுத்த ஒருவரை கொலை செய்ததில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை தேஸ்கோ 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும் தனது பண பலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் விரைவிலேயே வெளியே வந்துவிடுவார்.

    டாஸ்மாக் மதுபான கடைகள் பரவலானதாலும், தேஸ்கோவின் அரசியல் பிரவேசத்தாலும் சாராய வியாபாரத்தை விட்டுவிட்டு 8 லாரிகளை வாங்கி லாரி தொழிலில் ஈடுபட்டார். தேஸ்கோ தன்னை சாராய வியாபாரி தொழிலில் இருந்து மணல் கொள்ளை தொழிலுக்கு மாற்றிக்கொண்டார். செய்யாறில் இதில் கட்சி பிரமுகர்கள் ஒன்றுபட்டுதான் செயல்படுகிறார்களாம்.

    இப்படியான பின்னணி கொண்ட தேஸ்கோவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனாலும், இவருக்கு அதே செய்யாறைச் சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கள்ளக் காதல் இருந்துவந்துள்ளது. சுந்தரியின் அத்தியாவசிய செலவு முதல் ஆடம்பர செலவுகள் வரை எல்லாவற்றையும் தேஸ்கோவே கவனித்து வந்துள்ளார்.

    இப்படி இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இந்த தொடர்பு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தேஸ்கோவின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்ட சுந்தரி தேஸ்கோவை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த தேஸ்கோ சுந்தரியைக் கண்டித்துள்ளார். அதன் பிறகும் சுந்தரி அந்த உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த தேஸ்கோ இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுந்தரி காரில் ஆற்காடு சென்றுகொண்டிருந்தபோது, அடியாட்களுடன் சென்ற தேஸ்கோ செய்யாறு அருகே பாப்பந்தாங்கல் என்ற இடத்தில் காரை வழிமறித்து சுந்தரியை கத்தியால் வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த சுந்தரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். பட்டப் பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், தேஸ்கோ மீது கொலை முயற்சி வழக்கு போடுவதற்கு பதிலாக வழிப்பறி தாக்குதல் என்று வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+