உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறி... தருண் விஜய் மீது விடுதலைச் சிறுத்தைகள் பாய்ச்சல்
சென்னை: உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும் என்று தருண் விஜய் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கறுப்பர்கள் என வர்ணித்து தமிழர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் தருண் விஜய். அவரை பலரும் அவரது டிவிட்டர் பக்கத்திற்குப் போய் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், "நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?" என்று கேட்டுள்ளார்.
உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் காரரான இந்த மனிதரைத்தான் புனிதராகக் காட்டும் முயற்சியில் இங்கு சிலர் ஈடுபட்டுள்ளனர்.
கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வங்கி அதிகாரிகளைப் பார்த்து, 'பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா?' என்று கேட்டார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அதுபோல், 'தமிழுக்கு அரண் தருண்விஜய் என்றும்
தலித்களின் குரல் தருண்விஜய் என்றும் கூறி முலாம் பூசுவதன் மூலம், அவரது வர்ணாசிரம கொள்கை மாறிவிடுமா?' என்பதை, அவருக்கு கொடி பிடிக்கும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஷாநவாஸ் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications