சிறுமி ஹாசினி படுகொலை.. குற்றவாளிக்கு ஜாமீன் கூடாது.. திருமாவளவன் கோரிக்கை
Syn: சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: நந்தினி, ஹாசினி போன்ற சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.
போரூரை அடுத்த மதனந்தபுரம், மாதாநகரை சேர்ந்தவர் பாபு. சாப்ட்வேர் என்ஜினீயர் இவரது 7 வயது மகள் ஹாசினி கடந்த 5-ந் தேதி பாலியல் கொடுமை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் ஜஸ்வந்த் கைது செய்யப்பட்டார். சிறுமிக்கு எதிராக நடைபெற்ற இந்த சம்பவ்த்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தமிழகத்தில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களாக தமிழகத்தில் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தையே செயலிழக்க வைத்துள்ளது. காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. கொள்கை முடிவுகள் எடுக்க முடியாமல் நிர்வாகம் திணறுகிறது.
இப்படி ஒரு சூழலில்தான் நந்தினி, ஹாசினி போன்ற பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஹாசினி கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் இன்று மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட ஹாசினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. இது வேதனையாக இருக்கிறது. குறைந்தது 50 லட்சம் ரூபாயாவது ஹாசினி குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்வந்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அவருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலைதான் தமிழகத்தில் உள்ளது. ஆணவக் கொலைகள் நடக்கிறது. அதனை தடுக்க சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று திருமாவளவன் கோரியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications