ஆர்.கே.நகரில் திமுகவுக்கு வாக்களிக்க ரகசிய உத்தரவு போட்ட திருமாவளவன்?
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு திருமாவளவன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்தாலும் அக்கட்சியினரை திமுகவுக்கு வாக்களிக்குமாறு திருமாவளவன் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் மேட் பேரவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியும் வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன.
இதனால் மக்கள் நலக் கூட்டணி மீண்டும் உடைந்து போயுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்.கே.நகரில் ஆதரிக்க முடியாது; எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றார்.
அதேநேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என ரகசிய உத்தரவை திருமாவளவன் போட்டியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே திமுகவுக்கு மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் திருமாவளவன் இந்த உத்தரவு மார்க்சிஸ்ட் கட்சியை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications