ஜெயலலிதாவுக்கு எதிராக வி.சிறுத்தைகள்.., கருணாநிதிக்கு எதிராக இ.கம்யூ போட்டி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகளும், திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளதாக மக்கள் நல கூட்டணி-தேமுதிக கூட்டணி தலைவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் நல கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை, இன்று அக்கட்சி தலைவர்கள் வெளியிட்டனர். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:

ஆர்.கே.நகரிலும், திருவாரூரிலும் இக்கூட்டணியிலுள்ள எந்த கட்சியினர் போட்டியிடுவது என்பதில் ஆறு கட்சிகளுக்கு நடுவேயும் கடுமையான போட்டியிருந்தது.
ஆறு கட்சிகளுமே இவ்விரு தொகுதிகளிலும் போட்டியத்தான் விரும்பினர். இறுதியில், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்க்கும் வாய்ப்பை விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுப்பது என்று முடிவு செய்தோம்.
திருவாரூரிலும், எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் அனைத்து கட்சிகளுமே போட்டி போட்டன. நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை கொண்ட கட்சி, எனவே எங்களுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள் என்று தேமுதிகவும் கோரியது. இறுதியில் அந்த வாய்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்தது என்றார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications