கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டில் ஒலித்த வேதமந்திரங்கள்... வைரல் வீடியோ
சென்னை: கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டில் வேத மந்திரங்கள் முழங்கியது என்று சொல்வதை கேட்பவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அது நிஜமான உண்மை. ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட அனுமதி கேட்டு வந்தவர்கள்தான் வேத மந்திரம் முழங்க கருணாநிதியை வாழ்த்தினர். அந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி எழுதிய மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜர் என்ற தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி அனுமதி கேட்டிருந்தார்.
கடவுள் இல்லை என்று சொன்ன நாத்திக பகுத்தறிவு " பப்பரக்கா " என்று பல்லிளித்த நேரத்தில் எடுத்த வீடியோ. நம்புங்க. இது கருணாநிதி வீடு தான்.
Posted by சரவணன் சிவதாணு on Friday, January 8, 2016
இதற்காக வீட்டில் கருணாநிதியை சந்திக்க தேவஸ்தான அதிகாரிகளுடன் வந்த சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, தன்னுடன் வேதவிற்பன்னர்களையும் அழைத்து வந்து, வேதங்களை முழங்க வைத்தார். அவர்களது ஆசியை அன்புடனும் பொறுமையாகவும் ஏற்றுக்கொண்டார் கருணாநிதி. அந்த நிகழ்ச்சியின் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே இந்நிகழ்ச்சியின் போட்டோவை ஜன.6ம் தேதி, தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் கருணாநிதி. அவரது இந்த மாற்றத்தைக் கண்டு, ஆன்மிகவாதிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications