வீரலட்சுமியின் அடுத்த அதிரடி... திருவள்ளுவர் சிலையை அகற்றியதைக் கண்டித்து தீக்குளிப்புப் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹரித்துவாரில் அகற்றப்பட்ட திருவள்ளுவர் சிலையை 3 நாட்களுக்குள் மீண்டும் நிறுவப்படாவிட்டால் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி அறிவித்துள்ளார்.

ஹரித்துவாரில் பாஜக எம்.பி. தருண் விஜய் முயற்சியில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. ஆனால் உத்தரகாண்ட் மாநில அரசு தற்போது அந்த சிலையை அகற்றி கருப்பு பாலித்தீனில் கட்டி வைத்துள்ளது.

Veeralakhsmi to hold self immolation protest

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Veeralakhsmi to hold self immolation protest

இது குறித்து தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், மூன்று தினத்திற்குள் எங்கள் ஐயன் திருவள்ளுவர் சிலை அங்கு உரிய இடத்தில் நிறுவப்பட வேண்டும்

இல்லையெனில் உரிய மரியாதையுடன் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும். இல்லையெனில் தமிழக பாஜக தலைமை அலுவலகம் முன்பு மானமுள்ள தமிழர்கள் எமது தலைமையில் தீக்குளிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+