சேலம் 'குறுநில மன்னர்' கனவு.. வீரபாண்டி ராஜாவுக்கு செக் வைத்த 'சென்னை இளவரசர்'
சென்னை: சேலம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் தமது ஆதரவாளர்களை வெல்ல வைத்து குறுநில மன்னராகிவிடலாம் என்று கனவு கண்ட வீர்பாண்டி ராஜாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வைக்கும் வகையில் தேர்தலை ஒத்தி வைத்து பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறது தி.மு.க. தலைமை. இதில் வீரபாண்டி ராஜா தரப்பு ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாவட்டங்கள் 65ஆகப் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்னையில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன.

அப்படியும் பஞ்சாயத்து ஓயாத மாவட்டங்களாக இருந்தவை சேலமும் ஈரோடுதான். இந்நிலையில்தான் சேலம் கிழக்கு, மத்தி, மேற்கு மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான தேர்தல் மார்ச் 16,17,18 நடைபெறும் என்று தி.மு.க.தலைமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து 3 மாவட்ட செயலாளர்களையும் தாமும் தமது ஆதரவாளர்களும் கைப்பற்றி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கினார் வீரபாண்டி ராஜா. இதனால் எப்படியும் தோற்றுப் போய்விடுவோம் என்று அலறிய எதிர்தரப்பாகிய பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், சிவலிங்கம் ஆகியோர் சென்னையில் டேரா போட்டு 'தி.மு.க. இளவரசரிடம்' லாபி செய்தனர்.

இந்த லாபியும் ஒர்க் அவுட் ஆக தி.மு.க. தலைமை திடீரென சேலம் மாவட்ட செயலாளர்கள் தேர்தலை ஒத்திவைத்து சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு சிவலிங்கம், மத்திய மாவட்டத்துக்கு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கிழக்கு மாவட்டத்துக்கு வீரபாண்டி ராஜா பொறுப்பாளர்கள் என அறிவித்தது.
இதில் வீரபாண்டி ராஜா தரப்பு ரொம்பவும் அப்செட் ஆகிப் போனது. வீரபாண்டி ராஜாவின் பூலாவரி வீட்டில் உடனே திரண்ட தமது ஆதரவாளர்களிடம் கட்சி தலைமையை ஏற்று நடப்போம் அமைதிகாப்போம் என்று ஆறுதல் சொன்ன கையோடு தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க படை திரட்டினார்..

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு கேட்கும் வகையில் திரண்டது வீரபாண்டி ராஜாவின் படை. எப்ப தேர்தல் நடந்தாலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்கிறது வீரபாண்டி ராஜா தரப்பு. எப்படியும் உங்களை ஓரம்கட்டி குறுநிலமன்னராக கோலோச்ச விடமாட்டோம் என்கிறது 'இளவரசர்' ஆதரவு எதிர்தரப்பு.. இதனால் தள்ளிப் போகிறது சேலம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னாடியாது சேலம் தி.மு.க. மா.செ. தேர்தல் நடக்குமா?
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications