உடும்புத் தைலத்தை முழங்காலில் தேய்த்து.. ராஜ்குமார் மூட்டுவலியை சரி செய்த வீரப்பன்!
ராஜ்குமார் மூட்டுவலிக்கு உடும்பு தைலம் பூசிவிட்டார் வீரப்பன்.
Recommended Video

சென்னை: கடத்தி சென்ற நடிகர் ராஜ்குமாருக்கு மூட்டு வலியை சரி செய்து அனுப்பி வைத்த வீரப்பனை நாம் மறக்க முடியாது.
எத்தனையோ நபர்களை கணக்கில்லால் வெட்டி வீழ்த்திய வீரப்பனிடம் ஒருசில சில நல்ல குணங்களும் இருந்தன. அதில் ஒன்று உதவும் மனப்பான்மை. இந்த மனப்பான்மை தான் வீரப்பனை கிராம மக்கள் காட்டிக் கொடுக்காமல் பல காலம் நடமாட உதவியது.

வெட்டி சாய்த்த வீரப்பன்
மாநில அரசுகளை மிரட்டியே தன் காரியத்தை சாதித்து கொள்ளும் வீரப்பன், கர்நாடக சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரையும் கடத்தி செல்ல நேரிட்டது. 108 நாட்கள் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவும் செய்தது. ஆனால் அந்த 108 நாட்களிலும் வீரப்பன் தன் கோபத்தை ராஜ்குமாரிடம் காட்டியதே இல்லை. எத்தனையோ பேரை அசால்ட்டாக தலையை வெட்டி சாய்த்த வீரப்பனுக்கு ராஜ்குமார் மீது எந்த கோபமும் கடைசி வரை வரவில்லை. அதை விட, அதிக மரியாதையுடன் நடத்தினார்.
[துப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை! ]

மூட்டு வலியால் அவதி
வீரப்பனை பொருத்தவரை ராஜ்குமார் ஒரு கருவி. அவ்வளவுதான். நேரடியோகவோ, தனிப்பட்ட முறையிலோ எந்த கோபமும் ராஜ்குமார் மீது வீரப்பனுக்கு வந்ததில்லை. வயது முதிர்ந்த நிலையிலும் மூட்டுவலியாலும் அவதிப்பட்டு வந்த ராஜ்குமார், கடத்தலுக்கு பின்னர் அதிகமாகவே இன்னும் அவதிப்பட்டார். காட்டுக்குள் அடைபட்டு கிடப்பதால் போதிய மருத்துவ வசதிகளும் இல்லை.

வலியை உணர்ந்த வீரப்பன்
காரணம் கடத்தப்பட்ட ராஜ்குமாரை காட்டுக்குள் ஒரே இடத்தில் வீரப்பனால் வைக்க முடியவில்லை. அதனால் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ராஜ்குமாரை காட்டுக்குள்ளேயே இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் ராஜ்குமார் அனைத்து இடங்களுக்கும் நடந்து செல்ல வேண்டி வந்தது. இதனால் மூட்டுவலி இன்னும் அதிகமாக ராஜ்குமாரை பாதிக்க செய்தது. இந்த வலியை வீரப்பன் உணராமல் இல்லை.

தைலம் தடவிவிட்ட வீரப்பன்
காடு தான் தன்னுடைய உலகம் என்று திரிந்த வீரப்பன், அந்த காட்டிலேயே ராஜ்குமாருக்கான மருந்தை தயார் செய்தார். மூட்டு வலிக்கு உடும்பு தைலத்தை கொண்டு வந்து ராஜ்குமாருக்காக வீரப்பனே தடவி விட்டிருக்கிறார். பின்னர் ராஜ்குமாரை விடுவிக்கும்போது, வேட்டி, சட்டைகளைப் பரிசாகத் தந்து வீரப்பன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ராஜ்குமார் நெகிழ்ச்சி
இந்த விவரங்களை எல்லாம் இதை விடுதலையானபோது ராஜ்குமாரே பத்திரிகையாளர்களிடம் சொல்லி மகிழ்ந்தார். அதோடு கஸ்டடியில் இருந்த அத்தனை நாளுமே தன்னை அன்போடு நடத்தி வேளா வேளைக்கு வீரப்பன் உணவு கொடுத்ததாகவும் ராஜ்குமார் சொன்னார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications