மண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு- சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி புதிய இயக்கம்
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற பெயரை வைத்துள்ளார்.
சேலம்: வீரப்பனின் 66வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழாவில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் அவரது மனைவி முத்துலட்சுமி.
வீரப்பன் 18 ஜனவரி 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் வன்னியர் குலத்தில் பிறந்தார். சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார்.

வீரப்பன் மீது சந்தன மரங்களை வெட்டியது, யானைகளை வெட்டியது. ஆள் கடத்தல் கொலை என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநில காவல்துறைக்கும் சிம்மசோப்பனமாக இருந்தார்.
சந்தன வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களைக் கடத்தி வைத்து, அரசிடம் பணம் பெறுவது, அரசு பணியவில்லை என்றால் கடத்தப்பட்ட நபரைக் கொலை செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கொலை செய்த பின்னர், சந்தன வீரப்பனைப் பிடிக்க இரு மாநில கூட்டு அதிரடிப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் குழுவினரை அப்போதைய தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
வீரப்பன் பிறந்தது ஜனவரி 18,1952 அவர் சுட்டுக்கொல்லப்பட்டது அக்டோபர் 18, 2004. தமிழகம், கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் இன்றைக்கும் வீரப்பனை கதாநாயகனாக பாவித்து போஸ்டர் ஒட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
சேலத்தில் நடைபெற்ற வீரப்பனின் 66வது பிறந்தநாள் விழாவில் வீரப்பன் மனைவி முத்து லட்சுமி புதிய இயக்கத்தை தொடங்கினார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்து லட்சுமி தொடங்கியுள்ளார்.
இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய முத்துலட்சுமி, வீரப்பன் இருந்த வரை தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications