மக்கள் நல கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்? டிவிட்டரை 2வது நாளாக தெறிக்கவிடும் அபிமானிகள்!
சென்னை: வெல்லட்டும் மக்கள் நல கூட்டணி (#VellattumMNK) என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இன்று தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. நேற்றைக்கும் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக ஹேஷ்டேக் டிரெண்ட் ஆன நிலையில், 2வது நாளாக அக்கூட்டணி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
#VellattumMNK என்ற ஹேஷ்டேக் மூலம், திமுக, அதிமுக கட்சிகளின் கடந்த கால தவறுகளை மக்கள் நல கூட்டணி ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மக்கள் நல கூட்டணி தலைவர்கள் செய்த மக்கள் பணிகள் குறித்தும் அந்த ஹேஷ்டேக் விளக்குகிறது. நேற்று #Vote4MNK என்ற பெயரில் டிவிட்டரில் இவர்கள் டிரெண்ட் செய்தனர். பண பலம்மிக்க திமுக அதிமுகவினரை விஞ்சும் வகையில் சமூக வலைத்தளத்தில் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.
சில ஆவேச, சுவாரசிய டிவிட்டுகளை இப்போது பார்க்கலாம்:
|
திரைத்துறை
அதிமுக ஆட்சியில் அரசியல் சமந்தபட்ட படம் வர முடியாது. திமுக ஆட்சியில் கார்டூன் படம் கூட அவர்கள் அனுமதியின்றி வர முடியாது, என்கிறது இந்த டிவிட்.
|
கட்ட பஞ்சாயத்து
திமுக வந்தால் ஒருவரும் வீடுகட்ட முடியாது. ஒரு பத்திரப் பதிவு பண்ண முடியாது. ஒருவரும் நிம்மதியா இருக்க முடியாது என்பது மக்கள் அறிந்ததே என்கிறது இந்த டிவிட்.
|
கண்டனம்தான் சொல்வர்
மக்கள் பிரச்சனைகளின் போது கை கட்டி வேடிக்கை பார்க்கும்/ வெற்றுக் கண்டனம் கூறிவிட்டு பணம் சுருட்ட செல்லும் ஆட்சிகளை அகற்ற மக்கள் நல கூட்டணியை தேர்ந்தெடுக்க கோருகிறது இந்த டிவிட்.
|
மீத்தேன் திட்டத்தை நிறுத்தியது
மீத்தேனையும்...நியூட்ரினோவையும் நிறுத்தியது நாங்கள் தானே... ஒரு ஒட்டு போட்டு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள், என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
பரஸ்பர புரிதல்
திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களுக்கும் பரஸ்பர புரிதல் உள்ளதை அறிவார்ந்த மக்கள் அறிவார்கள். ஒருவர் ஊழலுக்கு இன்னொருவர் தண்டனை வாங்கி தந்ததே கிடையாது.. என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
யாரு பி டீம்
இவங்கள கேள்வி கேட்டா அவுங்களோட பி டீம் அப்படீன்னு சொல்றதும், அவங்கள கேட்டா இவங்களோட பி டீமுன்னு சொல்வதும் 2 கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. நாட்டுக்காக ஒருத்தரும் பேசிடவே கூடாது அதானே.. என்று ஆதங்கப்படுகிறது இந்த டிவிட்.
|
யோசிச்சாலே தெரியும்
ஒரு மணி நேரம் தனியா ஒரு இடத்துல உக்காந்து யோசிச்சி பாருங்க கடந்த கால திமுக, அதிமுக ஆட்சிய அதற்கு பிறகு நீங்களே சொல்லுவிங்க.. என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
வைகோ போட்ட வழக்குகள்
திமுக, அதிமுக பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளையும், மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு எதிரான வழக்குகளையும் ஒப்பிடுகிறது இந்த டிவிட்.
|
மக்களுக்கான யுத்தம்
தேர்தல் என்பது திமுக அதிமுக சண்டை அல்ல.. மக்களுக்கும் ஊழல் கட்சிகளுக்குமிடையேயான யுத்தம்.. இதில் மக்கள் வெல்ல, மக்கள் நல கூட்டணியே தேர்வு என்கிறது இந்த டிவிட்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications