ஏன் +2 தேர்வில் வேலூருக்குக் கடைசி இடம்? - காரணத்தை விளக்கும் கவிஞர் சுகிர்த ராணி
வேலூர் மாவட்டத்தில் முதல்தலைமுறை மாணவர்கள் அதிகம் இருப்பதால் பனிரெண்டாம் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு என கவிஞரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.
வேலூர்: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. அதில், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்று செய்திகள் வெளியானது. அதற்கு தமிழாசிரியராகப் பணிபுரியும் கவிஞர் சுகிர்தராணி கிராமப்புறங்கள் நிறைந்தது வேலூர் மாவட்டம். ஆகவே தான் கடைசி இடம் என தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 9.3 லட்சம் மாணவ, மாணவியர் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். அதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.
அதில் விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து அம்மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. வேலூர் மாவட்டம் 84.99 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

சுகிர்த ராணி
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானவுடன், வேலூர் ராணிப்பேட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் கவிஞர் சுகிர்தராணி தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

பின்தங்கிய வேலூர்
வேலூர் மிகவும் பின் தங்கிய மாவட்டம். விவசாயம் தான் பிரதான தொழில். இங்கு படிக்க வருபவர்களில்பெரும்பான்மையோர் முதல்தலைமுறை மாணவர்கள். அதனால் தான் தேர்ச்சி சதவிகிதம் குறைந்து கடைசி இடம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட வாரி லிஸ்ட்டுக்கும் எதிர்ப்பு
மேலும், ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவில் ரேங்க் பட்டியல் நடைமுறையை கைவிட்டதுபோல, மாவட்டவாரியாக தேர்ச்சிச் சதவீதப் பட்டியல் நடைமுறையையும் அரசு கைவிட வேண்டும். தேர்ச்சிச் சதவீதத்தில் பின்தங்குவதற்குச் சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் பல உள்ளன.

அரசுக்கு வேண்டுகோள்
அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தேர்ச்சிச் சதவீத அடிப்படையில் முதலிடம், கடைசியென மாவட்டங்களைப் பட்டியலிடுவதைப் பற்றியும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியாயமான கோரிக்கைதானே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications