அதிகாலையில் குளிர்… பகலில் சதமடிக்கும் வெயில்… வியர்க்கும் வேலூர்வாசிகள்
வேலூர்: வேலூரில் வெயில் சதமடித்துள்ளதால் நகரவாசிகள் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அதிகாலையில் கடுங்குளில், பகலில் கொளுத்தும் வெயில் என மாறி மாறி சீதோஷ்ணநிலை பரவிவருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெயிலூரான வேலூரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக 95 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது.

மாறும் சீதோஷ்ணம்
கடந்த சில நாட்களாக வேலூரில் வித்தியாசமான சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வருகிறது. காலை நேரங்களில் அதிகமான குளிரும், பகலில் வெயிலும் சுட்டெரித்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக காலை முதலே வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சதமடித்த வெயில்
நேற்றைய தினம் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த ஆண்டு அதனையும் தாண்டும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோடையை சமாளிக்க
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் வேலூரில் எங்கு பார்த்தாலும் சாலையோர பழக்கடைகள் முளைத்துள்ளன.

சென்னையில் வெயில்
95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தொடும் நிலை நிலவுகிறது. இதனால் பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியில் வரத் இப்போதே தயங்குன்றனர்.

114 டிகிரியை தொடும்
கோடை காலம் முடிய 3 மாதங்களுக்கு மேல் இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக கத்திரி வெயிலின் போது அதிகபட்சமாக 114 டிகிரியை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications