வேலூரில் நகைக்கடை அதிபர் கடத்தி படுகொலை: 2 பேர் கைது
வேலூர்: வேலூரில் நகைக்கடை அதிபரை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி தஸ்தகீர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 28), கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் அடகு, நகை கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் காங்கிரஸ் வர்த்தக பிரிவு நகர தலைவராகவும் இருந்தார்.
வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடைக்கு வந்தனர். காரை விட்டு இறங்கிய அவர்கள் கடையில் இருந்த முத்துக்குமாரிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து அவரை கத்திமுனையில் கும்பல் காருக்கு அழைத்து சென்றனர்.
காரில் அவரை ஏற்றும் போது அருகில் இருந்த அவரது நண்பர் தடுத்தார். அவரையும் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விட்டு முத்துக்குமாரை காரில் கடத்தி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் நகை கடை அதிபர் முத்துக்குமார் என்பது தெரியவந்தது.
கொலையாளிகள் அவரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து ரோட்டு ஓரம் வீசிவிட்டு சென்று உள்ளனர். தகவல் அறிந்த முத்துக்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆவேசத்துடன் மேம்பால ரோட்டில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எஸ்.பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.
மனைவி, குழந்தை
கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு சரண்யா என்ற மனைவியும், திவ்யபிரியா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. மேலும் சரண்யா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
வட்டித் தொழிலில் விரோதம்
இறந்த முத்துக்குமார் வட்டி தொழிலும் செய்து வந்துள்ளார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு பிரபல ரவுடி வசூர்ராஜா முத்துக்குமாரிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் முத்துக்குமார் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருட்டு நகை வாங்கிய வழக்கில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் மீது புகார் உள்ளது.
இந்த சம்பவங்களில் கொலைக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இருவர் கைது
கொலையாளிகள் காரில் தப்பி செல்வதை தடுக்க போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கூறி உஷார்படுத்தினர். தீவிர வாகன சோதனையும் நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி.பன்னீர் செல்வம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைகடை அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications