கூட்டாட்சிக்கு எதிரானது ஜிஎஸ்டி.. வரவேற்கும் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.. வேல்முருகன் வார்னிங்
மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி முறைக்கே எதிரானது ஜிஎஸ்டி என்றும், இதை வரவேற்கும் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி அறிமுகத்திற்கும் அதனை வரவேற்றுள்ள துரோகத்திற்கும் மன்னிப்பே கிடையாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களாட்சி - ஜனநாயகம் என்பது என்ன? எண்ணிக்கை பலமா அல்லது எண்ண பலமா? அல்ல; மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி - ஜனநாயகம். மனிதர் பிற மனிதரை ஆளுதல் அல்ல, மதித்தல் என்பதுதான் இதன் பொருள்.

நேர் எதிர் செயல்பாடு
ஆனால் மக்களாட்சியின் பெயரால் அதற்கு நேர் எதிராகவே செயல்பட்டு வருகிறது நடுவண் அரசு. அத்தகைய ஓர் உச்ச நடவடிக்கைதான் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வந்திருப்பதாகும்.

பாதுகாப்பு, அயலுறவு போதும்..
பாதுகாப்பு, ரூபாய்-நாணயம் அச்சிடல், அயலுறவு ஆகிய இம்மூன்று துறைகளுக்கு மேல் நிர்வகிக்கும் அவசியம் நடுவண் அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை. இதற்குத் தேவையான அளவு நிதியை மாநிலங்களிடம் அது பெற்றுக் கொள்வதுதான் முறை என்பதுவும் உண்மை.

பாதுகாப்பு, அயலுறவு போதும்..
பாதுகாப்பு, ரூபாய்-நாணயம் அச்சிடல், அயலுறவு ஆகிய இம்மூன்று துறைகளுக்கு மேல் நிர்வகிக்கும் அவசியம் நடுவண் அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை. இதற்குத் தேவையான அளவு நிதியை மாநிலங்களிடம் அது பெற்றுக் கொள்வதுதான் முறை என்பதுவும் உண்மை.

மாநில அதிகாரத்தை பறிக்கும் ஜிஎஸ்டி
ஆனால் ஏற்கனவே மாநிலங்களுக்கு, மத்திய அரசுக்கு என்று இருந்த அதிகார வரம்பினையும் உடைத்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து தன்னகத்தே குவிக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கையாள்கிறது நடுவண் அரசு. அதன் உச்சமான ஒரு நடவடிக்கைதான் ஜிஎஸ்டி!

நள்ளிரவில் ஜிஎஸ்டி
திருவிழாக் கொண்டாட்டம் போல் நள்ளிரவு நேரம் பார்த்து ஜிஎஸ்டி பறைசாற்றம் செய்யப்பட்டது. ஊடகங்கள் மூலம் ஜிஎஸ்டிக்கு பெரிதான ஒரு சித்திரமும் படைக்கப்படுகிறது.

மோடியின் சித்து வேலை
இதெல்லாம் மோடியின் வழக்கமான சித்து வேலைகள்! பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கி பிரச்சனையின் தாக்கத்தை மறைத்துவிடப் பார்ப்பதுதான் அவர் பின்பற்றும் ஒரே கொள்கை; அவருக்குத் தெரிந்த ஒரே உத்தி. இப்படித்தான் அவர் மக்களை ஏய்த்து வருகிறார்.

சப்பைக்கட்டும் முதல்வர்
ஆனால் இதனை வலிந்து வழிமொழிகிறாரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அது ஏன் என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. சிறு, குறு தொழில்-வணிகம் ஜிஎஸ்டியால் காணாமலே போய்விடும் என்ற அச்சத்தில் போராட்டம் நடப்பது ஒருபுறமென்றால், "ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பில்லை" என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறார் முதல்வர்.

அடிமையான மாநில அரசு
கூட்டாட்சி முறைக்கே எதிராக மாநில உரிமையை ஜிஎஸ்டி மூலம் பறித்திருப்பதுகூட நம் முதல்வருக்குத் தட்டுப்படவில்லையே? அரசு என்ற அமைப்பின் மிக உயர்ந்த அதிகாரமே வரி விதிப்புதான். வரியை வைத்துத்தான் அரசு! அரசு தோன்றிய ஆதிகாலம் தொட்டே இதுதான் நடை முறை. கலெக்டர் என்று சொல்கிறோமே, வரி வசூல் செய்பவர் என்பதுதான் அதன் உட்பொருள். வரி விதிப்பு உரிமை இல்லாததற்குப் பெயர் அரசு அல்ல. அடிமை என்பதுதான் உண்மை.

வரலாறு மன்னிக்காது
ஏற்கனவே முகாமையான உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு அடிமையாய் இருக்கும் தமிழகம் ஜிஎஸ்டி மூலம் கொத்தடிமையாகவே ஆக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உறுத்தலே இல்லாமல் இருக்கும் ஆட்சியாளர்களை வரலாறு மன்னிக்காது என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications