மிருக வெறியாட்டம் ஆடிய காவல் அதிகாரியை மனித உரிமை மீறல் குற்றவழக்கில் கைது செய்.. வேல்முருகன் ஆவேசம்
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது மிருக வெறியாட்டம் நடத்திய காவல் அதிகாரியை மனித உரிமை மீறல் குற்றவழக்கில் கைது செய்ய வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார்.
சென்னை: சாமளாபுரம் மக்களின் மண்டையை உடைத்தும் கையாலேயே மகளிரின் கன்னத்தில் அறைந்தும் மிருக வெறியாட்டம் ஆடிய காவல் அதிகாரியை மனித உரிமை மீறல் குற்ற வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம் சூலூரை அடுத்த சாமளாபுரத்தில் புதிதாகத் திறக்க இருந்த மதுக்கடைக்கு ஏற்கனவே அவ்வூர் மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் 11ந் தேதியன்று கடை திறக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த ஊர்மக்கள் மதுக்கடை முன் ஒன்றுதிரண்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைகுழந்தைகள் என அனைவரும் இருந்தனர்.

அதிரடிப்படை
போராட்டம் நடக்கும் என்று தெரிந்து அதிரடிப்படையினருடன் முன்னரே அங்கு வந்திருந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இங்கு "குடியிருப்புப் பகுதியில் கடை திறக்கமாட்டோம்" என்று உறுதிமொழி தந்தாலொழிய கலைந்து செல்லமாட்டோம் என்று மறுத்தனர் மக்கள்.

போலீசாரின் கண்மூடித்தனம்
இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கண்மூடித்தனமாக பொதுமக்களைத் தாக்கத் தொடங்கினர். அதில் மண்டை உடைந்து ரத்தம் வழிய கையால் அதைப் பொத்திக் கொண்டு கதறியதைத் தமிழகமே காண நேர்ந்தது.

தலை குனிவு
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணியை தன் கையாலேயே கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஏடிஎஸ்பி பாண்டியராஜன். நிலைகுலைந்துபோன அந்தப் பெண்மணி நடைதடுமாறிய காட்சியையும் தமிழகம் கண்டது. காவல்துறையினரின் இந்த மட்டுமீறிய செயல்களை படம்பிடித்த தொலைக்காட்சி செய்தியாளரின் கேமராவையும் பிடுங்க முற்பட்டனர்.

கண்டனம்
காலை எட்டு மணி தொடங்கி சுமார் எட்டு மணி நேரமாக அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தை மாலையில் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது காவல்துறை. காவல்துறையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து சாமளாபுரம் உட்பட அக்கம்பக்கத்து ஊர்களான கருமத்தம்பட்டி, சோமனூர், காரணம்பேட்டை ஆகிய ஊர்களில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான இந்தக் காவல்துறை வெறியாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுஜன அமைப்புகள், மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என தமிழகமே இதைக் கண்டிக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு
அண்மையில் உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டது. அதோடு குடியிருப்புப் பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக மதுக்கடை அமைக்கவும் தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காத எடப்பாடி அரசு, மூடிய சாலையோரக் கடைகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளாகப் பார்த்து திறக்க முயற்சிக்கிறது.

அறவழிப் போராட்டம்
இதை மக்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை. எடப்பாடி அரசின் இந்த மக்கள் விரோத செயலை எதிர்த்து தமிழகமெங்கும் பெண்கள் ஆவேசமாகப் போராடி வருகின்றனர். அத்தகைய ஒரு போராட்டம்தான் சாமளாபுரம் மக்கள் நடத்தியதும். அறவழியில் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. அதன் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்த காவல்துறையின் அத்துமீறலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கைது செய்..
சாமளாபுரம் மக்களின் மண்டையை உடைத்தும் கையாலேயே மகளிரின் கன்னத்தில் அறைந்தும் மிருக வெறியாட்டம் ஆடிய காவல் அதிகாரியை மனித உரிமை மீறல் குற்ற வழக்கில் கைது செய்யவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications