தமிழ்த்தாய் முன்பு விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்... வேல்முருகன் போர்க்கொடி!
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் தமிழ்த்தாய் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் தமிழ்த்தாய் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்பது மரபல்ல என்பது ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் எழுந்து நின்றார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல, அப்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் விஜயேந்திரரின் இந்த செயல் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேல்முருகன் கண்டனப் பதிவு
இந்நிலையில் விஜயேந்திரரின் செயலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறியுள்ளதாவது : கவிஞர் வைரமுத்து சொல்லியது போல தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை. தமிழ் மொழி தாய் மொழி அந்த மொழியை போற்றுகின்ற பாடலை பாடும் போது எழுந்து நிற்பது மரபல்ல என்று சொல்வது கண்டனத்திற்குரியது.

ஆணவம் தவிர வேறெதுவுமில்லை
இதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது ஆணவத்தின் வெளிப்பாடே. ஒரு வேளை வயதில் மூத்தவர் பெரிய காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்தால் கூட வயோதிகம் காரணம் சொல்லலாம். ஆனால் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றுவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தின் போது தியானம் செய்தேன் என்று சொல்வதெல்லாம் ஆணவத்தின் வெளிப்பாடன்றி வேறொன்றுமில்லை.

விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்
இளம் மடாதிபதியான விஜயேந்திரர் இனி வரும் காலங்களில் இது போன்று எந்த மேடைகளிலும் நடந்து கொள்ளக் கூடாது. இந்த செயலுக்கு தமிழ்த்தாய் முன்பும், தமிழறிஞர்கள் முன்பும் விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

போராட்ட களமிறங்குவோம்
இனி இதுபோன்றதொரு செயல் நடக்காது என்று கண்டிப்பாக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்டு உறுதியளிக்க வேண்டும். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க தவறும் பட்சத்தில் தன்னுடைய கோட்பாடு சரியென்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தார்கள் என்றால் நிச்சயம் போராட்டம் வெடிக்கும் என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications