For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வேல்முருகன் சென்னையில் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முரு

Google Oneindia Tamil News

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 நாட்களாக தொடர்ந்து பேரெழுச்சியுடன் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகள், விவசாயி அமைப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.

Velmurugan stages a protest against hydrocarbon exploration

மக்களின் இந்த உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்திருந்தது.

ஆனால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தாம்பரம் விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளதால் காவல் துறை முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெறும் என்று வேல்முருகன் அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை சேப்பாக்கத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

English summary
TVK leader Velmurugan staged a protest against hydrocarbon exploration at Chepauk guest house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X