காவிரி கலவரம்... அமைதி காக்க வேண்டும்... வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
சென்னை: காவிரி பிரச்சனையால் பெங்களூரில் கலவரம் வெடித்து தமிழர் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இருமாநில அரசுகளும் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால், பெங்களூரில் கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டன. அங்கு தமிழர்களின் சொத்துக்கள், வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டன. இதனால் பெங்களூரில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தின் சில இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்தேறின.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காவிரிப் பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் கலவரத்தைக் கட்டுப்படுத்த இரு மாநில அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அமைதியை நிலைநாட்ட பொது மக்களும் ஒத்துழைப்பை தருவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications