டிவிஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் மகன், மகளுக்கு நிறுவனத்தில் முக்கிய பதவிகள்!
சென்னை: டிவிஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு முக்கிய பதவிகள் அளித்துள்ளார் அதன் தலைவரும், மேலாண் இயக்குநருமான வேணு சீனிவாசன்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட டிவிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக 62வயதான வேணு சீனிவாசன் பதவி வகிக்கிறார். இந்நிலையில் தனது மகன் மற்றும் மகளுக்கு நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.
திருமண பரிசு
வேணு சீனிவாசனின் மகனான சுதர்சனுக்கு தற்போது 25 வயதாகிறது. இம்மாதம்தான் அவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், டிவிஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநராக பதவி அளித்துள்ளார் வேணு.
மகளுக்கும் கவுரவம்
அதேபோல வேணுவின் மகள் லட்சுமி (30) டிவிஸ் நிறுவனத்தின் கூடுதல் நான்எக்ஸ்சிகியூட்டிவ் இயக்குநராக்கப்பட்டுள்ளார்.
சந்தை பங்கு அதிகரிப்பு
இந்த அறிவிப்புகள் குறித்து டிவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "டிவிஸ் நிறுவனம் சந்தையில் தனது பங்கை அதிகரித்து வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சியில் சுதர்சன் அதிக கவனம் எடுத்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்பில் கெட்டி
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 2010ம் ஆண்டு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் சுதர்சன். இதேபோல பிஎஸ்சி இன்ஜினியரிங் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லட்சுமியை பொறுத்தளவில் அவர் 'வார்விக்' பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மேலாண்மை படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவராகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications