தினகரனை பார்க்கக் கூடாது என்று அறிவிக்க ஜெயகுமாருக்கு அருகதை இல்லை... எம்எல்ஏ வெற்றிவேல் 'பொளேர்'
தினகரனை பார்க்கக் கூடாது என்று அறிவிக்க ஜெயகுமாருக்கு அருகதை இல்லை என்று பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்தார்.
சென்னை: தினகரனை பார்க்க செல்லக் கூடாது என்று சொல்ல அமைச்சர் ஜெயகுமாருக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்று பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்தார்.
தினகரன் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தநிலையில் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் 20 அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி கட்சியின் நலன் கருதி அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்தோம்.
அவர்களின் தயவு எங்களுக்கு வேண்டாம். கட்சியினரும் தினகரன் தரப்பினருடன் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவிக்கையில், தினகரனுடன் பேசக் கூடாது என்று சொல்வதற்கு அமைச்சர் ஜெயகுமாருக்கு எந்த அருகதையும் இல்லை.
எந்த உரிமையும் இல்லை. எங்களை பொருத்தவரை பொதுச் செயலாளர் சசிகலாதான், துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான். எனவே அமைச்சர் ஜெயகுமார் எதற்காக பயப்படுகிறார் என்று தெரியவில்லை. தினகரனுக்கு ஆதரவாக 23 எம்எல்ஏ-க்கள் உள்ளன. வெறும் அமைச்சர்கள் மட்டும் கொண்டது அதிமுக அல்ல என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications