ஜெ.வீடியோவை வெளியிட்டதற்கு தினகரன் என்னை திட்டினார் - வெற்றிவேல்
ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டதற்கு தினகரன் என்னை திட்டினார் என்று வெற்றிவேல் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை : ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதற்கு என்னை தினகரன் திட்டினார் என்று அவரது ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோக்களை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டார். இது தேர்தல் விதிமீறல் என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ குறித்து சன் நியூஸ் செய்திக்கு வெற்றிவேல் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டதற்கு தினகரன் என்னை திட்டினார். நான் வெளியிட்ட வீடியோ முற்றிலும் உண்மையானதுதான்.

இன்று காலைதான் முடிவு
தேர்தலுக்கும் வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தலுக்காக வீடியோவை பயன்படுத்தும் ஈனபுத்தி எனக்கு இல்லை. வீடியோவை வெளியிட வேண்டும் என்று இன்று காலையில்தான் முடிவு செய்தேன்.

ஏராளமான வீடியோக்கள் உள்ளன
சசிகலா சொல்லிதான் டிடிவி தினகரன் என்னிடம் ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை கொடுத்தார். ஜெயலலிதா பற்றி இன்னும் ஏராளமான வீடியோக்களை வெளியிடுவேன். தேர்தல் ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

முதல் மரியாதை படம்
விசாரணை ஆணையம் கேட்டால் வீடியோக்களை தாக்கல் செய்வேன். ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்தார். வீடியோ வெளியிட்டதற்காக சசிகலா, தினகரனிடம் மன்னிப்பு கேட்பேன். ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டது கட்சி விரோத செயல் அல்ல. நேர்மையாக நடந்து கொண்டேன்.

ஜெ,வுக்கு மகள் இல்லை
அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. ஜெயலலிதாவை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். அவருக்கு மகள் எல்லாம் இல்லை. இது வீண் வதந்தி. இந்த வீடியோவானது ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டபோது எடுக்கப்பட்டது என்றார் வெற்றிவேல்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications