இந்து தீவிரவாத விமர்சனம்- திருப்பூர் அருகே நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: இந்து தீவிரவாதம் என விமர்சித்த நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மை திருப்பூர் அருகே அனுப்பர்பாளையத்தில் எரிக்கப்பட்டத்டு.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாத விமர்சனம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

VHP Cadres burn Kamal Haasan’s effigy

கமல்ஹாசனை சுட்டுக் கொல்லல் வேண்டும் என்று அகில பாரதீய இந்து மகாசபை துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதனிடையே திருப்பூர் அருகே அனுப்பர்பாளையத்தில் விஷ்வ இந்து பரிசத் நிர்வாகிகள் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VHP Cadres staged a protest and burnt effigy of Actor Kamal Haasan near Tirupur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற