மதுரையை 'மின்னல்' வேகத்தில் ரீச் ஆன விஎச்பி ரத யாத்திரை- வைரலாகும் வீடியோ
Recommended Video

மதுரை: தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறி அனுமதிக்கப்பட்ட வி.எச்.பி.யின் ராம ராஜ்ய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ளாமல் மின்னல் வேகத்தில் மதுரையை நேற்று வந்தடைந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ராம ராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடனான ரத யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் தொடங்கியது. இந்த ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ரத யாத்திரையை தமிழக எல்லையான நெல்லை புளியரையில் மறிக்க சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
புளியரையில் போலீஸ் தடையை மீறி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறியலில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்டார். இதேபோல தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இதேபோல் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இந்த ரத யாத்திரை எங்கும் நிற்காமல் மின்னல் வேகத்தில் மதுரை அய்யர்பங்களா பகுதியை வந்தடைந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இன்று இந்த ரதயாத்திரை ராமேஸ்வரம் செல்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications