Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிச்சாமிதான் மாற்றுத்திறனாளிகளின் சாமியாம்.. வைரலாகும் தியேட்டர் விளம்பரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எடப்பாடி தான் மாற்றுத்திறனாளிகளின் சாமியாம்.. வைரலாகும் தியேட்டர் விளம்பரம்-வீடியோ

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து திரையரங்கில் காண்பிக்கப்படும் விளம்பர துணுக்கு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழக முதல்வர்களாக கருணாநிதி, மறைந்த ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது தங்களை முன்னிறுத்தி பல தளங்களிலும் விளம்பரங்கள் செய்வது வழக்கம்.

    ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டங்களில் அவ்வாறு செய்யவில்லை. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, மீண்டும் முதல்வர் போட்டோக்களுடனான விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளன.

    தியேட்டர் விளம்பரம்

    தியேட்டர் விளம்பரம்

    அதிமுக அரசின் முகமாக மக்களிடம் பிரபல்யத்தை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறலாம். இந்த நிலையில்தான், தியேட்டர்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும் முன்பாகவும், இடைவேளை நேரத்திலும், அரசு சார்பிலான விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன.

    வைரல் விளம்பரம்

    வைரல் விளம்பரம்

    இதுபோன்ற ஒரு விளம்பரம் இப்போது வைரலாகியுள்ளது. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறி, கோவிலுக்கு அர்ச்சசனை செய்ய வருவதை போலவும், அப்போது அந்த பெண் பெயரில் அர்ச்சனை செய்ய உடன் வந்தவர் கூறுவதை போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.

    எடப்பாடி சாமி

    எடப்பாடி சாமி

    ஆனால், அர்ச்சனை செய்ய குருக்கள் கிளம்பும் வேளையில், இடைமறிக்கும், அந்த பெண், "சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்லை. சாமி பெயருக்கு" என்கிறார். அதற்கு குருக்கள், எந்த சாமி பெயருக்கு என கேட்க, அந்த பெண்ணோ "நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்குதான்" என்கிறார்.

    ரசிகர்கள் அய்யோ, அம்மா

    ரசிகர்கள் அய்யோ, அம்மா

    இந்த டயலாக்கின்போது தியேட்டரில் ரசிகர்கள் கூச்சல் சப்தமும் எழுகிறது. சிலர், ஏய் என கத்துகிறார்கள். தியேட்டரே அமளி துமளியாகிவிட்டது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. நீங்களும் பாருங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+