ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ- வைரலாகும் வீடியோ
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் டென்சனாகி பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தேமுதிகவுக்கு திமுக ரூ500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என வைகோ கூறியிருந்தார். இது தேர்தல் களத்தை படுசூடாக்கியிருக்கிறது.

வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, வைகோவிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
ஆனால் நேற்று இரவு நெல்லை பொதுக் கூட்டத்தில் வைகோவுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸை திமுக திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.
VAIKO TENSION.... AND GREAT ESCAPE...
Posted by Dhinesh Kumar S on Friday, March 25, 2016
இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி அதிக அளவில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் பாலிமர் நியூஸ் சேனலின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எல். கண்ணன் வைகோவிடம்,
திமுக தரப்பில் ரூ500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு.
அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற திரு வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வியை சொல்லி முடிக்கவில்லை.
ஆனால் வைகோ சட்டென எழுந்து,
"நான் இந்த இண்டர்வியூவை இத்தோட கேன்சல் பண்ணுகிறேன்" என சொல்லிவிட்டு காலர் மைக்கை கழற்றி கீழே போடுகிறார்...
அப்போதும் ஏ.எல். கண்ணன், சார்... நான் சொல்ல வர்றதை கேளுங்க... அடுத்து என்ன வார்த்தையை சொல்லப் போறேன் என சொல்ல அதை நிராகரித்தபடியே வைகோ அறை கதவை திறந்து டென்சனுடன் வெளியேறுகிறார்.
இந்த வீடியோ காட்சிதான் பரபரவென வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு மக்களுக்காக என்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பேட்டிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்காக வைகோவிடம் பேட்டி எடுக்கப்பட்ட போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக பாலிமர் நியூஸ் சேனல் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications