தமிழிசை, எச். ராஜா உருவபொம்மை எரிப்பு - சென்னை சென்ட்ரலில் விசிகவினர் மறியல்
பாஜக மாநில தலைவர் தமிழிசையைக் கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரபப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆகியோரின் உருவபொம்மையை எரித்து மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மெர்சல் பட விவகாரம் இப்போது பாஜக, விசிக விவகாரமாக மாறியுள்ளது. விஜயை விமர்சித்து அவரை வளைத்துப்போட முயற்சி செய்கிறது என்று கூறினார் திருமாவளவன்.
இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வளைத்து போடுகின்றனர் என்றார். இது பரபரப்பு தீயை பற்ற வைத்து விட்டது. இதனையடுத்து தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விசிக தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

தமிழிசை சவுந்தராஜனின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனையடுத்து சுமூக தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறினார் தமிழிசை. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரபரப்பான சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். எனினும் தமிழிசை, எச். ராஜாவை கைது செய்யும் வரை ஓயப்போவதில்லை என்று கூறியுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியுள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications