காவிரி பிரச்சனைக்கு தீர்வு, கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை... ஆளுநர் வித்யாசாகர் ராவ் உறுதி
தஞ்சாவூர்: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தாம் உதவுவேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார். அவர் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் சென்னை தமிழ் சங்கம் சார்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:

சட்டக் கல்லூரியில்...
சென்னை சட்ட கல்லூரியில் நான் படித்த போது திருவள்ளுவர் பற்றி தெரிந்து கொண்டேன். உலக மக்களுக்கு திருக்குறள் வழிகாட்டியாக உள்ளது.

கங்கை கரையில் திருவள்ளுவர்
கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பது அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சிறப்பு ஆகும். உத்தரகாண்ட், உத்தரபிரதேச மாநில ஆளுநர்கள் ஒத்துழைப்புடன் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

கல்வியில் திருக்குறள்
திருக்குறளை தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் கல்வியில் கொண்டுவர வேண்டும். காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினை குறித்து எனக்கு தெரியும்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண
இருப்பினும் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண என்னால் முடிந்தவற்றை செய்வேன். தமிழ்மொழி மிக பழமையான மொழி. செம்மொழி அந்தஸ்தை தமிழ் அடைவதற்கு அதனுடைய மிக சிறந்த இலக்கியங்களும், இலக்கணங்களும் காரணம்.
இவ்வாறு வித்யாசகர் ராவ் கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications