இனி இரவு 10 மணிக்கு மேல்.. கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால்.. அடுத்த ரெய்டுவிட்ட முதல்வர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க போலீசார் மஃப்டியில் ரோந்து செல்ல வேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஒரு வாரமாகி இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் கல்லூரிகள், பள்ளிகள், கோயில்கள் அருகில் இருக்கும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட விஜய் உத்தரவிட்டார். பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் இருக்கின்றனர்.

CM Vijay

தொடர்ந்து பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு விஜய் உத்தரவிட்டார். அதற்கேற்ப தொடர்ச்சியாக பல்வேறு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கவும் முதல்வர் விஜய் முனைப்பு காட்டி வருகிறார். அதற்கேற்ப திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குள் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் மோகன் தாஸை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னையில் காவல் ஆய்வாளர் இப்படி சஸ்பெண்ட் செய்வது வழக்கத்திற்கு மாறானது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஆனால் பல்வேறு கடைகளிலும் 10 மணிக்கு பின் கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது. தற்போது இதனை தடுக்க விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க போலீசார் மஃப்டியில் ரோந்து செல்ல வேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இரவு 10 மணிக்கு மேல் யாராக இருந்தாலும் பார்-ஐ விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் நடைமுறைப்படுத்துவார்களா என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+