எச். ராஜாவே இந்த பதிலடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
தம் மீது மதச்சாயம் பூசி அவமானப்படுத்திய பாஜக தேசிய செயலர் எச். ராஜாவுக்கு அதே மத அடையாளத்தின் மூலமாக நடிகர் விஜய் மரண பங்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
Recommended Video

சென்னை: தம் மீது மதச்சாயம் பூசி அவமானப்படுத்திய பாஜக தேசிய செயலர் எச். ராஜாவுக்கு அதே மத அடையாளத்தின் மூலமாக நடிகர் விஜய் மரண பங்க பதிலடி கொடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
பாஜகவைப் பொறுத்தவரையில் தங்களை விமர்சிப்பவர்கள் சொல்லும் கருத்துகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதே இல்லை. கோயபல்ஸ் பாணி பொய் பிரசாரம் என்பதுதான் பாஜகவின் ஆயுதமாக இருந்து வருகிறது.

பாஜகவின் கச்சேரி
அதேபோல் எதிர்த்து பேசுகிறவருக்கு ஒரு மத முத்திரையை குத்தி விடுவது என்பதும் பாஜகவின் வழக்கமான ஒன்று. இதே பாணியைத்தான் நடிகர் விஜய் விவகாரத்திலும் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா கையாண்டார்.

ஆரோக்கியம் எது?
மத்திய அரசின் கொள்கைகளை நடிகர் விஜய் விமர்சித்திருக்கிறார் மெர்சல் படத்தில்.. அதுசரி தவறு என விவாதிப்பதுதான் ஆரோக்கியமான போக்கு.

தமிழகமே ஆதரவு
அதைவிட்டுவிட்டு நடிகர் விஜய் என்பவர் ஜோசப் விஜய்.. அவர் கிறிஸ்துவர் என்பதால் மோடியை விமர்சிக்கிறார் என மதச்சாயம் பூசி வழக்கான அநாகரிக அரசியலை கையிலெடுத்தார் எச்.ராஜா. ஆனால் நடிகர் விஜய்யே கூட எதிர்பார்க்காத வகையில் ஒட்டுமொத்த தமிழகமுமே அவருக்கு ஆதரவாக இருந்தது.

ரசிகர்கள் உற்சகாம்
இதன் விளைவாகத்தான் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூட, ஜோசப் விஜய், ஜீசஸ் சேவ்ஸ் என்பது போன்ற மத அடையாளங்களை மறைக்காமல் நன்றி அறிக்கை வெளியிட்டு எச்.ராஜாவுக்கு மரண பங்க பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்த அறிக்கையை முன்வைத்து நடிகர் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications