பேனரை கிழிச்சா என்ன... இதை தடுக்க முடியுமா... கெத்து காட்டும் விஜய் ரசிகரின் வைரல் வீடியோ!
Recommended Video

திருப்பரங்குன்றம்: சர்கார் படத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. கிழிந்த பேனர்களை விஜய் ரசிகர்கள் சாலையோரம் உள்ள சிறுவியாபாரிகளுக்கு தந்து உதவும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் என்றாலே விஜய் ரசிகர்களுக்கு குஷியோ குஷி. வெர்ல்டு மொத்தமும் அர்லவிடனும் என்று சர்கார் படத்தில் வரும் பாடலைப் போல விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை தீபாவளி மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயாராகினர்.
திரையரங்கு வாசலில் பிரம்மாண்ட கட்அவுட் வைத்து தங்களது வரவேற்பை வெளிக்காட்டினர். சர்கார் வெளியாகி 2 நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்க சில காட்சிகள் மற்றும் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் அதிமுகவிற்கு எதிர்ப்பாக இருக்கிறது என்று ஆளும் கட்சியினர் விமர்சித்தனர்.

அதிமுக போராட்டம்
ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்ஸி, கிரைண்டர்களை தீயில் போட்டு கொளுத்துவது போன்ற காட்சிக்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க சர்கார் திரைப்படம் ஓடிய தியேட்டர்கள் முன்பு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

விஜய் பேனர்கள் சேதம்
இந்த போராட்டத்தின் போது கோவை, மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் விஜய்க்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து வீசப்பட்டன. விஜய் பேனர் சேதப்படுத்தப்பட்டதோடு தியேட்டருக்குள்ளும் சென்று படத்தை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் சர்கார் நிறுத்தப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டு மறுதணிக்கைக்கு பின்னர் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

சிறுவியாபாரிகளுக்கு கொடுத்து உதவி
படத்தில் இருந்து காட்சிகள் நீக்கப்பட்டாலும் நிஜத்தில் சிலர் விஜய் செய்தது போல இலவசப் பொருட்களை அள்ளி நெருப்பில் போட்டு அதனை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் போட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் போது கிழிக்கப்பட்ட பேனர்களை சேகரித்து விஜய் ரசிகர் ஒருவர் சாலையோரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறார்.

பேனரை கிழித்தவர்களுக்கு பதிலடி
ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் விஜய் ரசிகர் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நாங்கள் சர்கார் படத்திற்காக விஜய்க்கு பேனர் வைத்திருந்தோம் அதை யார் கிழித்தார்கள் என்று தெரியவில்லை. கிழிந்த இந்த பேனரை இந்த அக்கா கேட்டாங்க அவங்களுக்கு உதவியாக இருக்கும் என்று இதனை கொடுக்கிறோம். பேனர் கிழிஞ்சா கூட நாங்க பிறருக்கு கொடுத்து உதவுவோம் என்று அந்த ரசிகர் கெத்து காட்டுகிறார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications