உசுப்பேத்துனா உம்முனு.. கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும்.. விஜய் வசனத்தை பின்பற்றும் ரசிகர்கள்
கள்ளக்குறிச்சி: புரட்சி தலைவர் , தலைவி வழியில் புரட்சி தமிழனே என 100 அடியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு எழுந்துள்ளது. உசுப்பேத்துனா உம்முனு இருக்கணும், கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும் என்ற விஜய் பஞ்ச்சை பின்பற்றி அதிமுகவினரை விஜய் ரசிகர்கள் குளிர வைத்துவிட்டனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள சுவற்றில் கள்ளக்குறிச்சி நகர விஜய் ரசிகர் பார்த்திபன் சார்பில் ஒட்டபட்டுள்ள ராட்சத போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையிலும் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டபட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விஜய் ரசிகர்கள் சார்பில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டபட்டு வருகின்றன.

புரட்சி தமிழன்
இன்று கள்ளக்குறிச்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள ராட்சத போஸ்டரில் புரட்சி தலைவர் எம்.ஜி ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா மற்றும் புரட்சி தமிழன் விஜய் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், சட்டமன்றத்தில் கையெழுத்திட வா என 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டபட்டுள்ளதால் அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து விஜயை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டபட்டு வரும் ரசிகர்களின் போஸ்டர்கள் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை நாட்களாக போஸ்டருக்கு பெயர் போனது மதுரைதான் என நினைத்துக் கொண்டிருந்தோம்.

போஸ்டர்கள்
ஆனால் ரசிகர்கள் கள்ளக்குறிச்சியில் அட்டகாசமாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஏற்கெனவே புரட்சித் தலைவராக விஜயையும், புரட்சித் தலைவியாக விஜய் மனைவி சங்கீதாவையும் சித்தரித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எம்ஜிஆர்
தேனியிலும் எம்ஜிஆர் வேடத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. யாராலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆக முடியாது என அதிமுகவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் எந்த அதிரடியும் காட்டாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புரட்சித் தமிழன் விஜய் என போஸ்டர் ஒட்டி அதிமுகவினரையும் குளிர வைத்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications
