அடேங்கப்பா.. "இளைய தளபதி"யின் ரசிகர்களின் மடல் குவியலில் திண்டாடும் "தட்ஸ்தமிழ்"!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்குப் பிறந்த நாள்.. வாழ்த்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்.. அடேங்கப்பா.. வேலையே பார்க்க முடியவில்லை பாஸ்.. வந்து குவிய ஆரம்பித்து விட்டன வாழ்த்துகள்..!

எத்தனை ரசிகர்கள்.. என்ன மாதிரியான சந்தோஷம்.. எப்படி எப்படி வாழ்த்துகள்.. விஜய் ரசிகர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன் இந்தியா தமிழ் இணையதளம் மூலமாக உலகெங்கும் இன்றே தொடங்கி விட்டது.

தங்களது அபிமான விஜய்க்கு ரசிகர்கள் விதம் விதமாக வாழ்த்துகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டுள்ளனர். அதிலிருந்து முதல் பகுதி இதோ.!

விஜய் படங்களை வைத்து வித்தியாச வாழ்த்து

விஜய் படங்களை வைத்து வித்தியாச வாழ்த்து

நமது வாசகரும், விஜய் ரசிகருமான ந. குருமூர்த்தி வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ள வாழ்த்து... புரட்சி இயக்குனருக்கும் இசை தாய்க்கும் மகனாக பிறந்து சினிமாவை ரசிக்கும் ரசிகனாக வளர்ந்து மாண்புமிகு மாணவனாக சினிமாவை நல்ல முறையில் படித்து திருமலையில் உள்ள விஷ்ணு போல வளர்ந்து புதியகீதையை கொடுத்து யூத்தாக எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தமிழனே, வசீகரத்தால் உங்கள் மீது என்றென்றும் காதல் கொண்ட அண்ணியை ப்ரியமுடன் பூவே உனக்காக நான் என்று ஏற்றுக்கொண்டு பிரியமானவளே என்று இதயத்தில் இடம் கொடுத்து ஷாஜகான் போல காதலுக்கு மரியாதை செய்து ஆதியில்(முதலில்)அழகிய தமிழ் மகனை பெற்று, இளைய மகளை கண்ணுக்குள் நிலவு போல பார்த்து கொண்டு நிலாவே வா என்று காட்டி சோறூட்டி இருவரிடமும் FRIENDS போல நல்ல நண்பனாக பழகும் பகவதியே, உங்கள் love today என்றும் நெஞ்சினிலே இருக்கும் படி ONCEMORE பார்க்கும் படி நடிப்பை வெளிப்படுத்தி சிவகாசிக்கும் மதுரைக்கும் குருவி போல கில்லியாக பறந்து சென்று உங்கள் படங்களை பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளும் என்று ரசிகர்களை குஷி படுத்தி.கடலில் சுறாவாக கரையில் வேலாயுதமாக மக்களின் காவலனாக கைகளில் திருப்பாச்சி அருவா
ும்,வில்லும், துப்பாக்கியும், கத்தியும் ஏந்தி இளைய தளபதியாக இந்த ஜில்லாவையே காக்க புலி மீது ஏறி வேட்டைக்காரனாக நினைத்தேன் வந்தாய் என்று தெறிக்கும் அளவிற்கு மக்களை காக்க வந்த தலைவா நீங்கள் சொல்லப்போகும் நாளைய தீர்ப்பிற்காக வசந்த வாசலில், காலமெல்லாம் காத்திருக்கிறேன்!

பாட்ஷா ரோலில் .. தாமரைச்செல்வன்

பாட்ஷா ரோலில் .. தாமரைச்செல்வன்

வி. தாமரைச்செல்வன் என்ற ரசிகர் அனுப்பியுள்ள செய்தியில், Dear Sir, விஜய்யிடம் ரொம்பப் பிடித்த விஷயம்: குணம், நடிப்பு, நடனம், எளிமை. விஜய் எந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும்: பாட்ஷா.,, மாணிக் பாட்ஷா. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் -10க்கு 10. இவரது மெயிலில் இடம் பெற்றிருந்த "Increase the beauty of nature by planting trees" என்ற பதம் அழகு, அருமை..!

மாஸ் என்ட்ரின்னா விஜய்தான்... அப்துல் ஹக்

மாஸ் என்ட்ரின்னா விஜய்தான்... அப்துல் ஹக்

யு. அப்துல் ஹக் என்ற ரசிகர் அனுப்பியுள்ள மடல்... அடுத்த சூப்பர் ஸ்டாராகும் அனைத்துத் தகுதியும் விஜய்க்கு மட்டுமே உள்ளது. அனைத்து வகையான ரசிகர்களும் அவருக்கு உள்ளனர். காதலுக்கு மரியாதை படம் முதல் நான் விஜய்யை ரசித்து வருகிறேன். படங்களில் அவர் மாஸ் ஆக என்ட்ரி ஆவதும், நடனமும் பிடிக்கும். சமூக சீர்திருத்தவாதியாக அவர் நடிக்க வேண்டும். கட்சி் தலைவராகி பின்னர் முதல்வராக வேண்டும் என விரும்புகிறேன். அவருக்கு நான் தரும் மார்க் 8/10

ஹேப்பி பர்த்டே சார்- ராஜ் கமல்

ஹேப்பி பர்த்டே சார்- ராஜ் கமல்

ராஜ்கமல் என்ற வாசகர் ஹேப்பி பர்த்டே விஜய் சார் என்று வாழ்த்தியுள்ளார். ஆர். பிள்ளஞ்சினார் ரத்தன் என்பவர் விடுத்துள்ள செய்தியில், விஜய் சார் அப்பாவித்தனமாக நடிப்பது, அவரது சிரிப்பு, சண்டை, நடனம் அனைத்தும் பிடிக்கும். கேங்ஸ்டர் ரோலில் நடிச்சா சூப்பரா இருக்கும் என்று கூறியுள்ளார்.

உதவும் குணம் பிடிக்கும்.. பிரசாத்

உதவும் குணம் பிடிக்கும்.. பிரசாத்

கே.ஆர்.பிரசாத் என்ற ரசிகர் கூறுகையில், விஜய்யின் உதவும் குணம், அமைதி, வசன உச்சரிப்பு பிடிக்கும். பிராமணர் வேடத்தில், காமெடி வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும். அதிசயப் பிறவி, மாட்டுக்கார வேலன் ரீமேக்கில் அவர் நடிக்கலாம். அவருக்கு நான் தரும் மார்க் 10/10.

டான்ஸ் பிடிக்கும்... மணி அழகன்

டான்ஸ் பிடிக்கும்... மணி அழகன்

மணி அழகன் என்ற வாசகர் கூறுகையில், விஜய் படங்களில் நடனம், காமெடி, சண்டைக் காட்சிகள் பிடிக்கும். லவ்யூ விஜய் ஹேப்பி பர்த்டே இளைய தளபதி.

செல்பி எடுக்கனும்... அக்வின் தாஸ்

செல்பி எடுக்கனும்... அக்வின் தாஸ்

எல். அக்வின் தாஸ் அனுப்பியுள்ள மடல்...

1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.
I love his Cute smile, Youth & Eyes (Minsara Kanna), Romance (King of Romance)
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும்.
I like all your action (Kadaluku Mariyathai, Minsara Kanna, Kushi, Sachin(Love you alot)... Act one pure Love story...
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் (10க்கு 10, 10க்கு 9.. இப்படி)
10/10 (no words to say)
My Dear Vijay I want to take a selfi with you...plzzzzzzzzzz

சூப்பர் ஸ்டார் ரோலில் நடிக்கனும்.. பத்மாவதி

சூப்பர் ஸ்டார் ரோலில் நடிக்கனும்.. பத்மாவதி

பி.பத்மாவதி என்ற ரசிகை அனுப்பியுள்ள மெயில் இது..

1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் - innocent
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும் - manithan padathil superstar role
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் - 09/10

ஷங்கர் படத்தில்... அன்புராஜ்

ஷங்கர் படத்தில்... அன்புராஜ்

அமல்ராஜ் ஜேசு என்ற ரசிகர், விஜய்தான் எங்களது இதயம் என்று உருகியுள்ளார். அன்புராஜ் என்ற ரசிகர், விஜய்க்கு கியூட் பேஸ் என்று புகழ்ந்துள்ளார். கூடவே ஷங்கர் படத்தில் நடிக்குமாறும் கோரியுள்ளார்.

சைலன்ட் கில்லராக நடிக்கனும்... பாண்டியன்

சைலன்ட் கில்லராக நடிக்கனும்... பாண்டியன்

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாண்டியன் என்ற ரசிகர் அனுப்பியுள்ள மடல்..
1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.
Confident
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும்.
Silent killer
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க்
10/10

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+