விஜய் ஆட்சி 6 மாதத்தில் கவிழும்.. 25 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உறுதி! அடித்து சொல்லும் அதிமுக எம்பி
சென்னை: விஜய் ஆட்சி 6 மாதத்தில் கவிழும் என்று அதிமுக எம்பி தனபால் தெரிவித்துள்ளார். மேலும், 3 ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், விஜய்க்கு ஆதரவு அளித்த 25 எம்.எல்.ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சூழலில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றதாகவும் தனபால் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளித்தனர்.

அதிமுகவில் பிளவு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்து இருப்பது அதிமுகவிற்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் கொறடாவை நியமனம் செய்து உள்ளது. தங்கள் தரப்பையே அதிமுக கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று இரு தரப்பும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சபாநாயகர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
தவெக ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று சிவி சண்முகம் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு ஆதரவாளர்கள் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இத்தகைய பரபரப்புக்கு இடையே இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார்.
விஜய் ஆட்சி கவிழும்
இந்தக் கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் 80 பேர் பங்கேற்றதாக அக்கட்சியினர் கூறினர். கூட்டத்திற்கு பிறகாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி தனபால், விஜய் ஆட்சி விரைவில் கவிழும் என்றார். இது குறித்து தன்பால் எம்பி கூறியதாவது:-
3 ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், விஜய்க்கு ஆதரவு அளித்த 25 எம்.எல்.ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி. இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றனர்.. தவெகவின் செயல்பாடுகளால் ஆதரவு அளித்த கட்சிகளும் அதிருப்தியில் உள்ளனர். எனவே அடுத்த 6 மாதங்களில் விஜய்யின் ஆட்சி கவிழும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications