2014ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர் விஜய்! தொடர்ந்து 2வது ஆண்டாக அசத்தல்
சென்னை: கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் போன்றவர்களை முந்தி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார் இளைய தளபதி விஜய்.
கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியில் (சர்ச் இன்ஜின் ) அதிகமாக தேடப்படும் பெயர்களை ஆண்டின் கடைசியில் வெளியிடுவது வழக்கம். இவ்வாண்டும் அதேபோல பெயர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது கூகுள்.

தேசிய அளவில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் மோடியைவிட நடிகை சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார். அதே நேரம் பாலிவுட் நடிகைகளில் கத்ரினா கைப்பும், நடிகர்களில் சல்மான் கானும் முதலிடத்திலுள்ளனர். தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபுவும் அவருக்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனும் உள்ளனர்.
தமிழிலில் அதிகம் தேடப்பட்ட நடிகர் பட்டியலில் முதலிடம் இளையதளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. அவர் 2013ம் ஆண்டிலும் அதிகமாக தேடப்பட்ட பெயருக்கு சொந்தக்காரராகவே இருந்தார்.
இந்த பட்டியலில் 2வது இடம் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தும், நான்காவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், ஐந்தாவது இடத்தில் உலக நாயகன் கமல் ஹாசனும் உள்ளனர்.
பிற நாயகர்களைவிட குறைவான ரசிகர்களை கொண்டவராக அறியப்படும் சூர்யா, இதில் 2வது இடத்தை பிடித்து ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளார். அதே நேரம், விஜயை தேடியவர்கள் எண்ணிக்கையில் பாதிபேர்தான் அஜித்தை தேடியுள்ளனர். இருவருக்கும் நடுவே சரிபாதி வித்தியாசம் உள்ளது என்பதை கூகுள் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கத்தி படத்தை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளாலும், முரளி விஜய், விஜய் மல்யா, தலைவாசல் விஜய் போன்றோரை தேடும்போது பதிவான விஜய் என்ற வார்த்தைகளும் சேர்ந்து கூகுளில் விஜயை முன்னிலைக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று ஒரு தரப்பு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறது.
ஆனால் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதுதான் அவர் குறித்த, அதிகப்படியான தேடுதலுக்கு காரணம் என்று திரைத்துரையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பிரபல பத்திரிகையான 'போர்ப்ஸ்' கூட ரஜினியைவிட விஜய் அதிக ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளதாக கூறி முதலிடத்தை தந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications