சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் மக்கள் இயக்கம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்றும், ரசிகர்கள் தங்கள் விருப்பம் போல வாக்களித்துக்கொள்ளலாம் என்றும் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
விஜய் நடித்து வெளியான தலைவா உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு தற்போதைய அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டு இடையூறுகள் செய்ததாக சர்ச்சை நிலவி வந்தது. எனவே, வரும் தேர்தலில், அதிமுகவுக்கு எதிராக செயல்படும்படி விஜய் ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்களை அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நடுநிலை
அறிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு: வருகிற சட்டசபை தேர்தலில் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்லது. அதாவது எந்த கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை.

உங்கள் விருப்பம்
அதே நேரம், விஜய் ரசிகர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால், இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது.

தெளிவு நிலை
இந்த நிலைப்பாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறியிருக்கிறேன்.

பொய் தகவல்
இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளேன். இந்த நிலையில் சில ஊடகங்களில் விஜய் மக்கள் இயக்கம், ஒரு குறிப்பிட்ட, கட்சிக்கு ஆதரவு அளித்தது போல செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி.

பெயர், கொடி கூடாது
எனவே, விஜய் ரசிகர்கள் குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல வருகிற சட்டசபை தேர்தலில் தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றை மட்டும் எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது. இவ்வாறு புஸ்ஸி.என்.ஆனந்து தெரிவித்துள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications