தமிழக அரசின் புதிய அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயண் நியமனம்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் முத்துக்குமாரசாமி தெரிவித்திருந்தார்.

முத்துக்குமாரசாமியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இன்று புதிய வழக்கறிஞரை நியமனம் செய்தது. அதன்படி மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இன்று பதவியேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications