விஜய் படங்களுக்கு தொடர் நெருக்கடி தந்த அதிமுக அரசு... திமுகவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு
சென்னை: தொடர்ந்து விஜய் படங்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த அதிமுக அரசிற்கு பாடம் புகட்டும் வகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் விஜய் படம் வெளியாகும் நேரத்தில் தேவையில்லா இடையூறுகளும், சச்சரவுகளும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது. இதனால், இந்த சட்டசபை தேர்தலில் விஜய்க்கு நெருக்கடி கொடுத்தவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் பில்லா ஜெகன். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவுக்கு ஆதரவு...
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. இதனால் அதிமுக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

விஜய் படங்களுக்கு நெருக்கடி...
இதனைத் தொடர்ந்து கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஓடோடிச் சென்று ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக அரசு 2011 முதல் 2016 வரையிலான விஜய் படங்களை வெளியிட தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.

திமுகவுக்கு ஆதரவு...
எனவே 2016 சட்டசபைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்" என்றார்.

திமுக வேட்பாளர்...
இந்தக் கூட்டத்திற்குப் பின் பில்லா ஜெகன் தலைமையில் விஜய் ரசிகர்கள் ஊர்வலமாக திருச்செந்தூர் திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து, சால்வை அணிவித்து அவர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விஜயின் உத்தரவு...
அதேசமயம், இந்தத் தேர்தலில் தனது ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் ஏற்கனவே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த ரசிகர்களின் முடிவில் விஜய்க்கு சம்மதா என்பது தெரியவில்லை.
-
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள் -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications