பாஜகவுடன் நெருக்கம் காட்டும் எஸ்.ஏ. சந்திரசேகர்.. அரசியலுக்கு வருகிறார் விஜய்?
சென்னை: நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவரை விஜய் கோவையில் சந்தித்தார். அப்போதே அது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் மானேஜராகவும், மக்கள் தொடர்பாளராகவும் இருந்த பி.டி.செல்வகுமார், விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆசியோடு பாஜகவில் இணைந்துள்ளார்.

பி.டி.செல்வகுமார் பாஜகவில் இணைந்த உடன் அவருக்கு மாநில அறிவுசார் பிரிவு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மூலம் பாஜக உடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
புதிதாக கட்சி தொடங்கி அதை வளர்தெடுக்க நிறைய நாட்கள் பிடிக்கும் என்பதால் பலமிக்க தேசிய கட்சியில் இணைந்து அந்த கட்சி மூலம் அதிகாரபலத்தை பெற வேண்டும் என்பது எஸ்.ஏ.சந்திரசேரின் திட்டம். எனவே தேசிய அளவில் பலமான கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்
கடந்த சில மாதங்களாக வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்து மன்றத்தை பலப்படுத்தி வருகிறார் எஸ்.ஏ சந்திரசேகர். பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.சென்னையில் நடந்த யோக நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளரான தமிழிசை சவுந்தர்ராஜனுடன். எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். அவருடன் பி.டி.செல்வகுமாரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர், 20 ஆண்டுகளாக யோகா செய்து வருவதாகவும், இதன்மூலம் ஆஸ்துமா நோய் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததாகவும் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் பேசும் போது இன்றைய அவசர யுகத்தில் யோகா மிகவும் அவசியம் என்றும், நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது இதற்கு ஒரே மருந்து யோகாதான் என்று கூறினார். யோகா நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தராஜனுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் பங்கேற்றது பரபரப்பாக பேசப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் தந்தையின் அரசியல் நகர்வுகள்தான்.
பாஜக உடன் எஸ்.ஏ. சந்திரசேகர் நெருக்கம் காட்டுவதை பார்த்தால், விஜய் அரசியலுக்கு வருவதற்கான வெள்ளோட்டமாகவே கருதப்படுகிறது. தலைவா படத்திலேயே அரசியல் வசனங்கள் பேசப்பட்டன. கத்தி படத்தில் அரசியல் முடிவை விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இப்போது பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
பாஜகவில் விரைவில் எஸ்.ஏ. சந்திரசேகர் இணையப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அரசியல் கடலில் முதலில் குதிக்க அப்பா.தயாராகிவிட்டார்... அப்போ மகன்?
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications