வேலை இருந்தா பாருங்கடா... என்னடா இப்படிக் கிளம்பிட்டீங்க.. கஸ்தூரிக்கு சிரிப்பைப் பாருங்க!
சென்னை: விஜய் சேதுபதி ஒரே ஒரு வாட்டிதான் சொன்னார். இப்ப ஊரே கிளம்பிருச்சு.. அதை விட காமெடி அவர் சொன்ன அந்த ஒத்த வார்த்தையை வச்சு விளையாடிக் கொண்டுள்ளனர் டிவிட்டரில்.
நடிகர்கள் மத மாற்றம் செய்கிறார்கள்.. இதற்காகவே விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததாக ஒரு குரூப் கிளப்பி விட இந்த வதந்தியை பிடித்துக் கொண்டு பலரும் சீரியஸாக விவாதிக்கவே ஆரம்பித்து விட்டனர். இவர்களைப் பார்த்து விஜய் சேதுபதி சொன்ன வார்த்தைதான்.. வேற வேலை இருந்தா பாருங்கடா.
இந்த வார்த்தை இப்போது வைரலாகி விட்டது. இதை டிவிட்டரிலும் நேற்று டிரண்டாக்கினர். இப்போது இதை வைத்து மேலும் ஒரு காமெடி களேபர விவாதம் ஓடிக் கொண்டுள்ளது. தொடங்கி வைத்தவர் தமிழ்ப் படம் படத்தை இயக்கிய சிஎஸ் அமுதன். வாங்க அந்த காமெடியைப் பார்ப்போம்.
|
ரெஜிஸ்டர் பண்ணுங்கப்பா
இயக்குநர் சிஎஸ் அமுதன் போட்ட டிவீட் இப்போது வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி சொன்ன போய் வேற வேலை இருந்தா பாருங்கடா என்ற வாசகத்தை உடனே டைட்டிலாக பதிவு பண்ணுங்க என்று ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கு டேக் பண்ண அவர் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். பிறகென்ன மேட்டர் அப்படியே அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போய் விட்டது.
|
சிரிச்ச கஸ்தூரி
இந்த டிவீட்டைப் பார்த்து நடிகை கஸ்தூரி வந்து ஒரு சிரிப்பை சிந்தி விட்டுப் போக அதற்கும் 2 கமெண்ட். மேடம் அந்தப் படத்துலயும் உங்களுக்கு கேமியோ ரோல் இருக்குமா என்று கேட்டு வம்பிழுத்துள்ளார். அதற்கு இன்னொருவர் அப்படி அவர் நடிப்பதாக இருந்தால் அது வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் படமாக இருக்கும் என்று குசும்பாக கூறியுள்ளார். இந்த இரண்டுக்கும் இன்னும் கஸ்தூரி பதிலளிக்கவில்லை.. பார்க்கலாம் என்ன சொல்றார்னு.
|
அந்தப் பக்கம் குசும்பு
ஆனால் கஸ்தூரி இங்கு சிரித்து விட்டு தனது பக்கத்தில் போய் இன்னொரு குசும்பையும் செய்துள்ளார். போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...
*இருந்தா* "டா" என்று கேட்டுள்ளார். வேலை இருந்தாதானே என்ற அர்தத்தில் அவர் குத்தி விட்டுப் போயுள்ளார். விடுவார்களா மக்கள்.. அவரது டிவீட்டுக்கு டிசைன் டிசைனாக பதில் கொடுத்து விளையாடிக் கொண்டுள்ளனர்.
|
காம்போ
இன்னொருவர் வந்து இவங்க காம்போ ஓகேவா என்று கேட்டுள்ளார். அவர் கேட்டிருப்பது நடிகர் சிவாவை. இவர்தான் சிஎஸ் அமுதனின் தமிழ்ப் படம் முதல் பாகம், 2ம் பாகத்தில் ஹீரோவாக வந்து உலக சூப்பர் ஸ்டார்களையே உதற விட்டவர். இவரையும் விஜய் சேதுபதியையும் சேர்த்து எடுத்தால் சூப்பராக இருக்கும் என்பது இந்த ஜீவகனின் கருத்து. அமுதன் இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
ம்ம்.. இப்படித்தாங்க தமிழ்நாட்டுல பொழுது ஓடிட்டிருக்கு... என்ன பண்றது.. அப்படி ஆயிப் போச்சு நிலைமை!
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி!












Click it and Unblock the Notifications