கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்கக் கூடாது.. அப்போதுதான் வாழ்க்கை 'போர்' அடிக்காது.. நடிகர் விஜய்

கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்கக் கூடாது. அப்போதுதான் வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்கும் என்று மெர்சல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்கக் கூடாது. அப்போதுதான் வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்கும் என்று மெர்சல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் கதாநாயகரான நடிகர் விஜய் பேசியது:

முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முரளி மற்றும் ஹேமாவிற்கு வாழ்த்துக்கள். அவர்களின் 100வது படமாக மெர்சல் அமைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மெர்சலுக்கு மெட்டு

மெர்சலுக்கு மெட்டு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் திரைத்துறைக்கு வந்து இது 25வது வருடங்கள் ஆகிறது. அவரோடு சேர்ந்து நானும் இந்தப் படத்தில் வேலை செய்திருப்பது சிறப்பான விஷயம். மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி உலகத்தை மெர்சல் அடையச் செய்தவர், இன்று மெர்சலுக்கு மெட்டு போட்டிருக்கிறார்.

நன்றி

நன்றி

6 மாதத்தில் இந்தப் படத்தை முடித்த அட்லி மற்றும் அவரது உதவி இயக்குநர்களுக்கு நன்றி. மேலும், கதாநாயகிகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்தியா மேனன், சத்தியராஜ், கோவை சரளா உள்ளிட்ட அனைத்து மெர்சல் டீமுக்கு நன்றி.

Recommended Video

    இன்டர்நெட்டில் கசிந்த மெர்சல் பாடல் வீடியோ
    எதிர்மறை விஷயங்கள்

    எதிர்மறை விஷயங்கள்

    நான் அட்வஸ் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. நிறைய இடங்களில் பலர் என்னிடம் பலர் கேட்பதுண்டு. உங்களைச் சுற்றி நடக்கும் எதிர்மறை விஷயங்களை என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள்.

    சிம்பிள் வழி

    சிம்பிள் வழி

    சிம்பிள் வழி, சும்மா விட்டுவிடுங்கள். வேற வழியே இல்லை. அதை எல்லாம் தாண்டிதான் வந்தாக வேண்டும். எல்லோருக்கும் நம்மைப் பிடித்துவிட்டால் நமக்கு வாழ்க்கை போர் அடித்துவிடும். கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்காமல் போனால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.

    உண்மையான அன்பு

    உண்மையான அன்பு

    அன்பாக இருந்தால் பழகும் 10 பேர் கூட உண்மையாக இருப்பார்கள். நான் அன்பாக இருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் எனக்குக் கிடைத்துள்ளீர்கள். பெரிய ஹிட் படங்களை நடித்தாலும் உங்களை நான் பெற்றதுதான் சிறப்பு என்று விஜய் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+