தவெகவுக்கு 10 சீட்டு கிடைக்கும்.. எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா விஜய்? அதிமுக நிர்வாகி பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் தவெக 10 சீட்டுகளை கடந்து வெல்ல வாய்ப்பில்லை என்று அதிமுக செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி தெரிவித்துள்ளார். தவெகவுக்கு சிறுபான்மை மற்றும் பட்டியலின சமூக மக்கள் ஆதரவு அளிப்பதாக கூறிய அதிமுக நிர்வாகி, எதிர்க்கட்சியாக திமுகவே வரும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துவிட்ட சூழலில், தவெக எந்தக் கட்சியின் வாக்குகளை பிரிக்கப் போகிறது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தவெக கணிசமான வாக்குகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சோசியல் மீடியாவில் தவெக தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன.

Vijay

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி பேசுகையில், 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவால் எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. வெறும் 23 சீட்டுகள் மட்டுமே திமுகவுக்கு கிடைத்தது. 2011ஐ போலவே 2026 தேர்தலையும் திமுக ஒரு பிம்பத்தை கட்டமைத்தே எதிர்கொண்டுள்ளது. நாதகவினர் தேர்தலுக்கு பின் மக்களை கொச்சைப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தேர்தலுக்கு முன் நாதக வீராப்பாக பேசுவார்கள்.. தேர்தலுக்கு பின் சால்ஜாப்பு சொல்வார்கள். தவெகவுக்கு பல இடங்களில் பூத் ஏஜெண்ட் கூட இல்லை.. களத்தில் திமுக மற்றும் அதிமுக இடையில் தான் போட்டி உள்ளது. ஆனால் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆதரவு தவெகவுக்கு இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வெற்றிபெற எங்களுக்கே வாய்ப்பு உள்ளது.

தவெக வாக்குகளை பிரிப்பார்கள். தவெக பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை தவெக பிரிக்கிறது. இந்த இரு தரப்பு வாக்குகளும் அதிமுகவுக்கு பெரியளவில் வருவது கிடையாது. திருவாளவனின் வாக்குகள் தவெகவுக்கு செல்கிறது. ஆட்சி மீதான அதிருப்தி, ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரியளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

தவெக எதிர்க்கட்சியாக வரலாம் தான்.. ஆனால் பெட்டியை திறந்தால் தான் தெரியும்.. தவெகவால் 2வது இடத்தை பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. என்னை பொறுத்தவரை திமுக தான் எதிர்க்கட்சியாக வரும்.. ஆனால் தவெக 10 சீட்டுகளை கடந்து வெல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. விஜய்க்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. அதில் பலரின் கண்களை மறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+